Sunday, September 18, 2022

BORN (OR) MADE (OR) SELF-MADE?

 

It is a pleasant day. I am strolling through the arid lands of Indiana in the United States.

 

Aah, here I see a majestic creature walking towards me. I am frozen with goose bumps. Stranger than ever, she starts speaking to me, “Hey who are you?” I reply, “I am a human; by the way, who are you?”

 

“Whoa! You don’t know me? I am the king of birds. I was once ravenously hungry and picked up a mule deer fawn on my way home for supper!

 Tennyson penned a poetry on me


 I am THE EAGLE. What brings you to my home pitch?

 What an attitude! I thought. She went on…

 “When eagles are still eaglets, they get literally kicked out of our nests by their parents!

 Parents feed them less. Eaglets squawk and complain, but mom tries to entice them to leave the nest and hunt for themselves. If these initial efforts fail, she will fly by the nest with food in her mouth. Often this is all it takes for eager, overachieving young eagles. However, there is usually a stubborn one or two couch potatoes like me, determined to remain in the nest and play video ga….eh, I mean stay in the nest and wait to be fed.

When this happens, Momma Eagle will eventually kick the youngster out of the nest. See, she knows that the world is scary for the young eagle and that he would rather stay where it is safe, and all his needs provided. If the parent eagles continue to feed and provide for them, they have no reason to leave the safety and comfort of the nest. Eagles know that by letting them stay in the nest for too long, they will miss out on the essence of all it means to be an eagle.

 “Amazing! Yet I am happy to be born human where my parents fed me for 20 years”, to which the eagle said,     “I am proud to be born eagle”.

When I hit 40…”

“You have a mid-life crisis…is that it?”

The eagle snapped me. “Can you be a little serious please?  At 40, her long and flexible talons can no longer grab prey which serves as food, her long and sharp beak becomes bent and old aged and heavy wings, due to their thick feathers, stick to her chest and it’s very difficult to fly. She is left with 2 options - either to die or…to go through a painful transformation process which lasts 150 days…yes you read it right...150 long days...

She will have to fly to a mountain top and sit on the nest. She knocks her beak against a rock until it comes out. Then she waits for a new beak to grow back. Next, she pulls out her talons and when new talons grow back, she plucks old, aged feathers. After five months, the eagle takes its famous flight of rebirth and lives for 30 more years”.

I bid farewell to the eagle and fly to the Yellowstone national park. There I see a shy fella repeating a slogan, The strength of the pack is the wolf, and the strength of the wolf is the pack

Hey, you are Akela, right? Mowgli’s wolf friend, I exclaimed.

Yes, he said coyly and continued, “Every day is a constant struggle for survival as we wolves work to patrol miles of territory, take down large and dangerous prey, face harsh elements, and battle the constant threat of illness, injury, and disease. While it is possible for a lone wolf to navigate these challenges successfully, the odds of survival are drastically increased for wolves living in a pack and working as a team. In addition, packs operate in a manner that requires each member to contribute equally toward the group’s shared responsibilities. This manner of cooperative living works to alleviate the pressures on not only the pack alpha member, but on every member of the pack. Ultimately, wolves understand that the pack’s survival relies on teamwork, and that working together yields the greatest potential for success.

Success is never guaranteed. In fact, when it comes to hunting, wolf packs fail in making a kill far more often than they succeed. On average, wolves land themselves a meal approximately one out of every ten hunts. Imagine, for a second, how a human might feel in a similar situation, having put hours of time and effort into a group activity that ultimately resulted in failure. I expect that a lot of negative emotions come up like anger, disappointment, blame. Wolves, however, have no use for these feelings. Placing blame won’t result in a meal. Instead, they analyse the group’s mistakes to learn from them, adding to the pack’s collective wisdom over time, and in doing so, increasing their chances of success in the future. When wolves get into a confrontation with one another, it’s big, it’s loud, and it’s immediate, but then it’s over. Wolves don’t hold grudges or nurture hurt feelings.

You might think their howling is all noise, but we wolves have highly tuned and refined communication skills. Via barks, howls, and tiny adjustments in our body language, wolves convey messages, excitement and warnings. This communication keeps each pack synced and efficient.”

Hey, who is this who is splashing water on me? Oh my Gosh, it’s my mother trying hard to wake me up reminding me that it’s my daughter’s exam day and I was supposed to drop her? Uff I just realized that it was all a dream! Or was it augmented reality? Don’t you think the fascinating dream had some answers for some of my pursuit on leadership.?

The eagle gave the first leadership lesson from the parenting story. A leader is one who nudges you and if you don’t budge, pushes you out of your comfort zone. I also recollect a few of L&T’s leaders Mr. Srinivasan and Mr. Venkatachala Babu and my mentor and boss in Areva Mr. Prashant Sinha, who really pushed me out of my comfort zones multiple times and each of those times shaped me as a better professional. Transformative Leadership is what comes to my mind thinking of the eagle’s second innings. It brought chills down my spine thinking of the deep pain taken by the eagle to transform.

Wow! What an insight I have got from just 2 animals. I already understood what coaching and transformational leadership style is from the eagle and participative leadership style from the wolves is. The other styles like delegative, authoritarian and affiliative must be exhibited widely by social creatures in nature like ants, bugs, elephants etc. Now what style do I exhibit? Experiencing these guys, I feel I exhibit more of coaching and participative leadership, though it is not to undermine the other style. It’s the circumstance that shall dictate the style of leadership and there can be no good or bad style. To implement tough decisions, autocratic style suits best; whereas to arrive at tricky solutions, participative style is the one to go with.

LEADERS: Are they Born (or) Made? Or as Stephen Covey said, are they self-made?

It is for you to ponder and find your answer guys! Happy Leadership journeys to all of us!

Good Videos to watch:

https://www.youtube.com/watch?v=1ryv1u2yXCk

https://www.youtube.com/watch?v=U6EKK0EZm40

https://www.youtube.com/watch?v=2ehvyAMFL30

https://www.youtube.com/watch?v=YcW5uMJrSwg



 

Sunday, January 29, 2017

ஜல்லிகட்டு வந்தாச்சு, இன்னும் என்ன? பதில் இதோ...

ஜல்லிகட்டுக்கு  நிறைய ஆதரவும் பார்த்தாச்சு...எதிர்ப்பும் பார்த்தாச்சு...இப்போ சூடு ஆறும் முன் கொஞ்சம் உணர்வையும் தாண்டிய உண்மையையும் பேச வேண்டிய நேரம்.
நிறைய பேர் கோக் பெப்சிய தடை பண்ண சொல்லி குரல் கொடுக்கறாங்க, நல்ல விஷயம். ஆனா அதோட படம் முடியல; இது விழா முடிஞ்சு வீடு போய் சேரும் சேதி அல்ல. அதுக்கும் மேல நிறைய இருக்கு மக்கா...நம்ம செய்ய வேண்டியது நிறைய இருக்கு. போராட்டத்துக்கு அணி திரட்டிய நம்ம இப்போ வேலைக்கு அணி திரட்டணும்; விழிப்புணர்வு பகிர பலம் சேர்க்கணும். ஏன்னா இது அப்புடி சொன்ன உடனே வற்ர மாற்றம் கிடையாது. ஆழ்ந்து புரிதலுடன் வர வேண்டிய மாற்றம்.
அப்புடி என்னதான் சொல்ல வரேன்னு கேட்டீங்கனா விஷயம் ரொம்ப சிம்புள்..
1. மொதல்ல சாப்பாட்லேர்ந்து ஆரம்பிக்கறேனே..
ஒரே ஒரு கேள்வி தேன்... நம்ம சாப்பிடறத நம்ம தாத்தா பாட்டி பாட்டன் முப்பாட்டன் எல்லாம்  சாப்பிட்டாங்களா? ஆம் என்றால் சாப்பிடவும், இல்லையென்றால் இன்றோடு விட்டு விடவும்...அய்யோ முடியாதுன்றவங்க, முயற்சி செய்து பாருங்க...இது என்னடா அட்வைஸ் மட்டும் பண்ணுது...இவங்க பண்ணுவாங்களானு யோசிக்கறவங்க கொஞ்சம் பொறுங்க, பதிவின் இறுதியில் பதில் வருது...
2. இரெண்டாவது யார் யாரெல்லாம் சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்க மாட்டீங்க கை தூக்குங்க? அட தெரிஞ்சது தானே நமக்கு அழுகின தக்காளினாலும் பல பளனு பாக் பண்ணி ஏசில ட்ராலில தள்ளி கார்டுல தேச்சாத்தான் "grocery purchase" ,பண்ண feel வரும்...இப்போ என்ன பண்றீங்கன்னா உங்க இயற்கை விவசாயிய நோக்கி ஓட்றீங்க...அட யாருப்பா இப்போ இயற்கை விவசாயமெல்லாம் பண்றதுன்னு உச்சு கொட்டாம கூகுள கேளுங்க நம்ம இயற்கை விவசாயத்தோட வெற்றியும் அத உயிர்ப்பிச்சு வெச்சிருக்கும் நம்ம நாட்டு மாடுகளோட இடமும் புரியும்...நம்ம சென்னை மற்றும் சுத்தி உள்ள கிராமங்கள்ளயே அவ்ளோ பண்றாங்க..."too costly"னு ஒத்த வரில கமண்ட் பண்ணிங்கனா நஷ்டம் உங்களுக்கு தான்.நம்ம சூப்பர் மார்க்கெட்ல,"Buy 1 Get 1 Free"ல ஏமாந்த கணக்கையெல்லாம் பாத்தா இது ஜுஜுபி கண்ணா...so if u spend wisely, organic food is never out of our reach...
3. மூணாவது கொஞ்சம் கஷ்டம்; ஆனா தேடினா நம்ம சிங்கார சென்னைலியே கெடைக்கும்...நீங்க தேட வேண்டியது நம்ம காணாம போன கோனார...அட தமிழ் உரை இல்லீங்கோ!! இவரு நம்ம ஊரு பால்கார்!! இப்போ ரொம்ப கொஞ்சம் பேரே இருக்காங்க பாஸ், கொஞ்சம் சீக்கிரம் போகணும்...இல்லனா இவங்களும் நம்மள மாதிரி ஐடி அடிமைகள் ஆகிடுவாங்க....அவர தேடி புடிச்சி ஒரு லிட்டர் பசும்பால்,என்ன பால்? ஆங் பசும்பால் அத வாங்கி கொஞ்சம் குடிச்சி பாருங்க...அட பச்சையாத்தேன். (உடனே சுத்தம்முனு கொடி தூக்காதீங்க நம்ம பாட்டன் முப்பாட்டன்னுக்கு தெறியாத சுத்தமொண்ணும் இல்லைங்கோ!!) ஒரு இருவது வருசம் பின்னாடி போன feel வரும்...அப்புறம் நீங்களே முடிவு பண்ணுங்கோ இன்னமும் இந்த ஷாம்பு பால், யுரியா பால், சுண்ணாம்பு பால்(சுண்ணாம்பு சத்து நமக்கு தேவையானதுனு நம்மளயே நம்ப வெச்சிருவானுக!be careful) இதெல்லாம் வேணுமா, இல்ல பசும்பால்,எருமை பால் வேணுமான்னு...
4. அடுத்து நம்ம போராட்டம் சீமை கருவேல மரங்களுக்கு எதிராத்தான் இருக்கோணும்...அட இதுவும் மரம் தானேன்னு நினைக்கறவங்களுக்கு ஒண்ணு சொல்றேன் கரு வேலு விவசாயின் நம் பூமியின் எமன்; அரசு நீர் உள்ள  ஏரிகள், கண்மாயில்   மண்ணைக்கொட்டி நீர்  நிலைகளை மூடுவதற்கு  முன்பே கண்மாய்களை அழிக்கும் வேலையை  கச்சிதமாகச்  செய்து வருவது கருவேல மரங்களே. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இந்த நஞ்சான மரத்த வேரோட எடுத்துட்டு நம்ம நாட்டு மரங்களான புங்கை, வேம்பு இதெல்லாம் நட்டு வளர்க்கணும்..

5. இதெல்லாம் பண்ணாலும் விவசாயம் செழிக்க நிறைய மழை வேண்டிருக்கு...பெய்யற மழைய  சேமிக்க வேண்டிருக்கு...நம்ம சென்னைலியே ப்ளாட் போடாம மிச்சம் இருக்குற ஏரிகள், குளங்கள் எல்லாத்தையும் தூர் வாரணும், கரைய பலப்படுத்தணும் அடுத்த மழைக்குள்ள. சோ இந்த கோடை விடுமுறைய கொஞ்சம் விவசாயத்துலயும் செலவிடுங்க குட்டீஸ்...நாங்க எங்க் பொண்ண கூட்டீட்டு போக போறேன், நீங்களும் வாங்க ப்ளீஸ்...நம்ம பிள்ளைங்க சோறு "big bazaar"லேர்ந்து வருதுன்னு நெனச்சிட்டிருக்காங்க பாவம்! கொஞ்சம் மண் வாசனையையும் சொல்லி கொடுப்போமே!!
6. இன்னும் என்னம்மான்னு சலிச்சுக்கறவங்களுக்கு, பாயிண்ட் ஒன்றின் பதில் இதோ...
நாங்க குடும்பமா சூப்பர் மார்க்கெட்டை விட்டு நாலு வருஷம் ஆகுது...எங்கள் குழந்தைக்கு முப்பதாம் நாள் முதல் தாய் பாலுடன் சேர்த்தது கோனாரின் பசும்பால் தான் இன்று மாலை குடித்த பால் வரை..எங்கள் குழந்தைக்கு சர்க்கரை அறிமுகம் இல்லை...அதை ஒரு demon என்றே சொல்லி வளர்த்துள்ளோம்...
பனவெல்லம்,பனங்கல்கண்டு, வெல்லம்,நாட்டு சர்க்கரை எல்லாம் உண்டு. நான் சர்க்கரை என்பது "processed sugar". எங்களுக்கும் சர்க்கரை பயன்பாடு ரொம்பவும் குறைவு...இன்றும் வெளியே சென்றால் அவளுக்கு நான் பேக் செய்வது கடலை மிட்டாய், எள் மிட்டாய்,வாங்கித் தருவது இளநீர், கரும்பு சாறு; அதில் எங்களுக்கு பெருமையே...இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் நம் பாரம்பரியமான எண்ணெய் குளியல், இயற்கை முறை சாம்பிராணி, உரை மருந்து, வசம்பு, கசாயங்கள், குழந்தைகளுக்கான நலங்கு மாவு, நமக்கான சீயக்காய் (our family has good healthy hair), தாம்பூலம் போடுவது இதெல்லாம் நான் தமிழ் புத்தகத்துலேர்ந்து காபி பண்ணி இங்க போடலங்கோ!
சோ இறுதியா என்ன சொல்ல வரேன்னா "ஜல்லிகட்டு பனிப் பாறையின் முனை மட்டுமே! தோண்ட தோண்ட உங்களுக்கு புதையல் நிச்சயம்...
நம் பாரம்பரியம் எனும் கடல்ல முழுகி முத்தெடுத்தவங்க, நான் ஏதாவது விட்றுந்தேனா, உங்க கருத்த சொல்லுங்கப்பா!
உணவு அரசியலப்பத்தி பதிவு விரைவில்  வருது! இந்திய FB வரலாற்றில் முதல் முறையாக!

Sunday, January 22, 2017

மெரினா டைரி குறிப்பு - இது கதை அல்ல நிஜம்

மழை வந்த போதும் மனிதம் வளர்த்தோம்...இப்போதும் காளைகளுக்காக களம் இறங்கிய எம்குல சிங்கங்கள்,மனித்தயே வளர்த்துள்ளார்கள் என்பதற்கு இந்த நள்ளிரவுச் சம்பவமே சான்று..
இதோ நான் கண்ட மெரினா...

"அம்மா எம்புட்டு பெரிய கூட்டம் !!"
"டீவில பாத்ததோட மலைக்க வெக்குதே...வா நம்மளும் உள்ளற போய்டலாம்...சீக்கரம் முடிச்சிட்டு போகணும்..அடுத்த வாரம் உனக்கு மாடல் exam வேற...பத்தாப்பு படிக்கற புள்ளய எதுக்கு போராட்டத்துக்கெல்லாம்னா உங்கப்பாரு கேக்கவா செய்யறாரு..துபாய்லேர்ந்து ஃபோன் போட்டு கறாரா சொல்லிட்டாரு...நான் இங்க களத்துல நிக்கும் போது என் மவ அங்க போர் கொடி தூக்கணும்னு...காலம் கெட்டு கெடக்குனா கேட்டா தானே..."
பேசிக்கொண்டே உள்ளே சென்றோம் நானும் குழலியும்..பேருக்கேற்றார் போல் நல்ல வனப்பாகவே இருந்தாள் குழலி...அவள் அம்மாவாக எனக்கு சற்றும் மனம் இல்லை பெண் பிள்ளையை ரோட்டுக்கு இழுத்து வர...இந்த காலத்துல எவனத்தான் நம்ப முடியது...எங்க கேப் கெடைக்கும் வேலைய காட்லாம்னு தான் அலயறானுவ...அதுவும் இங்க சுத்தி தடி தடியா இத்தனை பேரு இருக்கானுவ...
சட்டென கறகறன்னு பக்கத்துல ஒரு குரல்.."அம்மா வாங்க..தங்கச்சி வாம்மா..."
திகைத்தேன்,இது என்னடா கல்யாண வீட்ல கூப்டற மாதிரி கூப்டறாங்க...இது போராட்டமா இல்ல வீட்டு விழாவா?
அந்த கறகற குரல் ஆளே ஒரு இருக்கையில் அமர வைத்தான். பின்னர் யாரையோ பார்த்துச் சொன்னான் "சித்தப்பு, நம்ம குழுல ரெண்டு பேரு சேந்துருக்காங்க.."
சித்தப்பு ஒன்றும் வயசானவறாய் தெறியவில்லை...
மறுபடியும் அதே விழா அழைப்பு.."அம்மா தங்கச்சி வாங்க.. சாப்டீங்களா? எது வேணும்னாலும் ஒரு குரல் ஒடியாந்துருவோம்.."
இவரு தான் இந்த கூட்டத்துக்கு தலைவனோ...நான் நினைத்ததை  கேட்டாற் போல் ஒரு வயதானவள் சொன்னாள் "தலைவன்னு இங்க யாரும் இல்லமா...நம்ம நாட்ட சுத்தம் செய்ய எல்லாருமா கிளம்பிருக்கோம்..கூட்டம் பெரிசா இருக்குதில்ல அதான் கொஞ்சம் ஒழுங்கு பண்றாங்க..மத்தபடி எல்லாருமே போராளிகள்தேன்...
அந்த சித்தப்பு ஒரு IT companyல மேனேஜர். அதோ அந்த தாத்தா super market owner.அந்த தம்பி(கறகற குரல்) பெரிய வக்கீல்.எல்லோரும் சமூக அந்தஸ்த்து துறந்து சமூகத்துக்காக கூடியிருக்கோம்மா".
கொளுத்தும் வெயிலில் கோஷமிட்டோம்
"வேண்டும் வேண்டும் ஜல்லிகட்டு வேண்டும்"
"தடை செய் தடை செய் பீட்டாவை தடை செய்"
போராட்டத்துனூடே
அவரவர் தெரிந்த தகவல்களை பகிர்ந்தார்கள்..ஏறு தழுவுதல், தமிழனின் 5000 ஆண்டு சரித்திரம், இந்த தடைக்குப்பின் உள்ள சர்வதேச அரசியல்,சிவ சேனாபதி அய்யாவின் விளம்பறமற்ற பணி,இன்னும் இன்னும்..அப்பப்பா என்னென்னா சதி செய்யறாங்க...நம்ம கொஞ்சம் அசந்தா கட்டுன வேட்டிய கூட அவுத்துடுவானுக போல...இன்னைக்கு பாலுக்கு சதி  பண்றவைங்க நாளைக்கு காத்த கூட வெல குடுத்து வாங்க வெச்சுருவானுக பாவிங்க.
நாள் ஓடியது. ஊடகங்கள் வந்தன, பேட்டிகள் எடுத்தன...யாரோ எங்கிருந்தெல்லாமோ வந்து வயிறையும் மனதையும் நிறைத்தார்கள். 60km தாண்டி இங்கே குரல் குடுக்க வந்திருந்தாள் ஒரு கர்ப்பிணி "தமிழ்ப்பணியில் தமிழக்கரு" என்ற பலகையுடன். அவளை அனைத்து அண்ணன்களும் சித்தப்புக்களும் தாத்தாக்களும் தாங்கினார்கள். பிறக்கும்முன்னே அவள் சிசுவுக்கு பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்.அதுக்கு இப்போதே மாமாக்களும் தம்பிக்களும் அத்தைகளும் பாட்டிகளும் கிடைத்துவிட்டார்கள்.
தூரத்தில் பார்த்து விட்டு குழலி சொன்னாள் "அம்மா அங்க பாரும்மா ராகவா லாரன்ஸ்..."
"ஆமா...ஒரு பகட்டும் இல்லாம  எப்புடி உக்காந்துருக்காருல.."
அப்புறம் தெரிந்து கொண்டோம் பெண்களின் சௌரியத்திற்காக தன் கழிவறை கொண்ட காரவனை மெரினாவில் வரவழைத்திருப்பது. கண்கள் அனிச்சயாய் பனித்தன.
சூரியன் மறைந்ததுதான் தாமதம் மின்சாரத்தை துண்டித்தது வீரமுள்ள அரசு.ஆம் அவர்களால் முடிந்தது அவ்வளவே..உடனே அனைவரும் கைகளை உயர்த்தி கைபேசி வெளிச்சம் பகிர்ந்தார்கள்.
பட்டாபிராமிலுருந்து வந்ததால் தூக்கம் கண்ணை சுழற்றியது. குழலி விழித்திருக்க நன்றாக தூங்கிவிட்டேன் போல. விழித்த போது நள்ளிறவு. அனைத்து பெண்களும் நல்ல உறக்கத்தில்; என் மேல் யார் போர்வை போர்த்தியது? குழலியை தேடின கண்கள்.எங்கும் தெறியவில்லை. ஒரு வேளை பாத்ரூம் சென்றிருக்கலாமென 2 நிமிடம் பொறுத்தேன்; அவள் வரவில்லை. யாரைக் கேட்பது இந்த கூட்டத்தில்? தலை சுற்றியது. யார்?எப்படி? தலையில் அடித்துக்கொண்டு "குழலீ....." என்று ஓலமிட்டேன் என் பைத்தியகாரத்தனத்தை நினைத்து கோபத்துடன்..என் சத்தம் அனைவரையும் எழுப்பியது.."என்னம்மா ஆச்சு?" "எல்லோரும் வந்தார்கள்"
"என் மவள காணலய்யா...இங்கதான இருந்தா..அய்யோ கண் அசந்துட்டேனே..உங்கள எல்லாம் நம்பி மோசம் போய்ட்டேனே...வயசு பொண்ண கூட்டிட்டு போவேணாமுனு அடிச்சிக்கட்டேன்னே இப்போ என்ன செய்ய.." ஒரு அம்மாவாய் அங்குள்ள அத்துணை பேரும் குற்றவாளிகளாய் தெரிந்தார்கள்.
குழலியின் மொபைல் switched off ஆகியிருந்தது. எனக்கு மயக்கம் வர, வாய் குழற, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாயந்து விட்டேன். ஆளுக்கொரு புறமாய் ஓடினார்கள். ஐந்து நிமிடம் கழித்து ஒரு பையன் வந்தான் "உங்க பொண்ணு 10th std ஆ?" "ஆம்" "பேரு?" வாய் குழற "கு..கு..ழலி" என்றேன்.
"அங்க தான் இருந்தோம் நாங்க எல்லாம். சூர்யா அண்ணா 10th std studentsக்கு பாடம் எடுத்தாங்க. Exam வருதில்ல...அவங்க coaching centre வெச்சிருக்காங்க. NIT topper. Exam tips, வாழ்க்கை tips எல்லாம் கொடுத்தாங்க.இங்க வெளிச்சம் இல்ல ல அதான் அந்த பக்கம் இருந்தோம்."
"குழலி எங்க இப்போ"
"அந்த அண்ணன் ட குழலி ஏதோ தனியா பேசிச்சு..அப்புறம் ரெண்டு பேரும் தனியா போயிருக்காங்க"
மறுபடியும் "அய்யோ..." என்றேன்.
இரண்டே நிமிடத்தில் வந்தாள் குழலியும் அந்த அவனும்..."எங்க டீ போயிட்டு வர இருட்டுல தனியா அவனோட...அவன் முழியே சரியில்லியே,இதுல  NIT topper வேற.."
நான் நினைத்ததை கேட்கும் முன் குழலி முந்தினாள். "அம்மா எனக்கு சானிடரி நாப்கின் தேவைப்பட்டுது மா. நீ தூங்கட்ருந்த அதான் அண்ணன கேட்டேன். Night நால கடை எதுவும் இல்ல அதான் கொஞ்ச தூரம் போய் வாங்கி கொடுத்தாங்க மா.."
யாரோ பளார் பளாரென அறைந்தது போல் இருந்தது. ஒரு நிமிடத்தில் அனைவரையும் கொச்ச படுத்த நினைத்தேனே...நானெல்லாம் படித்து என்ன பயன்? அந்த சூர்யா இமயமாய் தெரிந்தான். ஐந்து நிமிடம் கிடைத்தாலும் அத்து மீறும் இந்த காலத்தில்...வார்த்தை வரவில்லை. "என் குல சாமீ..." என அந்த சூர்யா காலில் விழுந்து கரைந்தேன்...என் மனதின் கறை அகற்ற. அவனோ பதறி  "அம்மா இங்குள்ள புள்ளங்க எல்லாம் எங்க கூட பிறந்தவங்க தாம்மா...இதுக்கு போய் பெரியவங்க என் கால்ல போய்...குழலி அம்மாவ சமாதானப்படுத்து மா" என்றான்.
அந்த நள்ளிறவில் மார் தட்டி உறக்கச் சொன்னேன் "நான் தமிழச்சி" என்று;
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே கையில் வாளோடு தோன்றிய மூத்த குடி எம் தமிழ் குடி" என்று.
அன்று புதிதாய் பிறந்தது நாள் மட்டுமல்ல..நானும் தான்!
நம் மக்கா கைபேசியிலியே இருப்பதால் அவர்களைப் பற்றி நமக்கு இருக்கும் கருத்து எவ்வளவு தவறு? இவர்கள் மட்டும் இல்லையேல் வெள்ளத்திடமும் பீட்டாவிடமும் ஒரு சமூகமாய் அல்லவா தோற்றிருப்போம்!
இவர்கள் ஜல்லிகட்டிற்காக மட்டும் போராடவில்லை. நம் அடையாளத்திற்காக கூடியிருக்கார்கள்...பாரதியின் வாக்குப்படி ரௌத்திரம் பழகுகிறார்கள். இப்படை தோற்க எப்படையும் வெல்லாது. நிம்மதியாய் உறங்கிப் போனேன்,குழலி அவள் அண்ணன்களோடு இருக்கும் தைரியத்தில்; பெறாமலே லட்சம் பிள்ளைகளை பெற்ற பெருமித்ததில்.நிச்சயம் ஜல்லிகட்டு நடக்கும் என்று நம்பிக்கை வந்து விட்டது..நம் மக்கா இருக்காக, பாத்துப்பாங்க...

அர்ச்சனாவின் பின் குறிப்பு:-
இன்று விமான நிலையத்தில், டீவியில் வெளி நாட்டு சேனலில் ஜல்லிகட்டு நடந்ததை காட்டினார்கள்.அதை பார்த்த ஒரு வெள்ளைகார அம்மாள் சொன்னாள் "you guyz have lot of guts" என்று.நானோ "yes.its in our blood" என்றேன். ஆம் நாம் சாதுவாய் இருந்த காலம் மலையேறி போய் விட்டது.பொறுத்தது போதும், விழித்தெழு தமிழா. விதையாய் வாழ்ந்த நமக்கு இன்று இனிதே விடிந்து விட்டது.
விமானத்தில் சொன்னார்கள் "our crew can speak English, Hindi, Oriya, Bengali, Nepali.." அட தமிழ் நாட்ல கிளம்புற விமானத்துல ஒரு தமிழ் பேசற crew member இல்லயா...நான் உரைத்து விட்டேன் என் கருத்தை விமானியிடம்."ma'am that could be difficult" என்றான். இன்னொரு போராட்டத்திற்கு இதோ நான் தயாராகிரேன்...

ஆண்டு - 2020
History text book of NCERT class 4
என் பக்கத்து வீட்டு குழந்தை படிப்பது கேட்டது,
"In the biggest revolution of modern times, lakhs of tamils  gathered on the marina beach in chennai and across tamilnadu to peacefully protest against the ban on their traditional sport jallikattu and through that protect their native cattle breeds from extinction.The ancient tamils had devised a unique breeding technique and interwined it with tradition. The highlight of the protest was the utmost dignity and discipline of the protesters for which tamils won the hearts of crores of people across the world".
என் பக்கத்து வீட்டு குழந்தை கேட்டது, "அம்மா இந்த வருஷம் மெரினா ஜல்லிகட்டுக்கு கூட்டிட்டு போ மா...அப்புறம் சிவ சேனாபதி அய்யாவ சந்திச்சு எங்க school friends அவர் researchக்கு volunteer பண்றத்துக்கு கேக்கணும்."

            இனி ஒரு விதி செய்வோம்






Saturday, January 7, 2017

விலை

!!ஹாய்!!

வாட்சப் ஃப்ளாஷ் ஆச்சு..
என்னாச்சு? இந்த நேரத்துல மெசேஜ் வந்துருக்குன்னு நானும் ரிப்ளை பண்ணேன்.

"சொல்லுப்பா"

- நம்மல்லாம் அவங்களமாதிரி இருக்க முடியாதோ!!

"எவங்கள மாதிரி??"

- FB பக்கமே போக க்கூடாதுன்னு நினைக்கறேன். ஆனாலும் முடியலையே.. பயபுள்ளைக விதவிதம்மா ஃபோட்டோ போட்டு அசத்தறானுவ.. பொறாமையா இருக்குப்பா.!!

"அட, அப்படி என்னப்பா ஆச்சு??"

- ஒருத்தன் என்னடான்னா நியூ யார்க் டைம் ஸ்கொயர்லருந்து போட்டோ போடறான்..இன்னொருத்தன் கலிஃபோர்னியா "பே" ஏரியாங்கறான், லண்டன்கறான்.. நாமல்லாம் என்னாத்த சாதிச்சோம் சொல்லு.. ஒரு வெளிநாட்டுக்காவது போயிருப்போமா?? வாழ்க்கைல தோத்துட்டோமா டீ??

"ஏன், நம்ம நல்லாதானே இருக்கோம்? சொந்த வீடு, ஹேட்ச் பேக் காரு, பப்பு, உங்கம்மா, எங்கம்மாப்பா, நமக்குன்னு ஊர்ல மனுஷங்க.. வேற என்ன வேணும் சொல்லு.. நல்லாதானே போயிட்டுருக்கு!! "

- இருந்தாலும் இந்த மாதிரி போஸ்டல்லாம் பாத்தாதான்..!!

"அட அவங்க போஸ்ட்டு மட்டும் பாத்து அவங்க லைஃப்ஸ்டைல கணக்குப் போடாத. அவங்க அதுக்கு கொடுக்கற விலயே தனி... ஏதோ ஒரு ஊர்ல போயி உழைச்சு பொழச்சு, எந்த சொந்தமும் சுத்தி  இல்லாம புள்ள பெத்துக்கிட்டு, ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை ஊருக்கு வந்து, அய்யோ புழுதி!, அய்யோ பூச்சின்னு அலரி, நுனி நாக்கு ஆங்கில பெருமை பேசி, பிள்ளைங்களுக்கு  தமிழ் பேச தெரியாதுனு ஊருக்கே poster அடிச்சி.......நம்மள எல்லாம் படிக்காத முட்டாள்கள் மாதிரி பாத்து..அப்பப்பா...அவங்க நிஜத்த திருப்பிப் பாத்தாதானே தெரியும், நாமல்லாம் எவ்வளோ நல்லா இருக்கோம்னு"

- ம்ம்.. என்னோட ஃப்ரெண்டுக்கு குழந்தை பிறந்துது போன மாசம். நாக்குக்கு கீழ ஏதோ பிரச்சனையாம். அந்த பிஞ்சுக்கு ஆப்பரேஷன் பண்ணாங்களாம், யார்டா உன் கூட இருந்தான்னா, நாந்தான் பாத்துக்கிட்டேன்னான். எனக்கு திக்குன்னு ஆகிடுச்சு!! என்னதான் காசு இருந்தாலும் மனுஷங்க வேண்டாமா??

"கரெக்டு 'நான் லண்டன்/ ஃப்ளோரிடா/ பெர்லின்/ அமெரிக்கா ல வேலை பாக்கறேன்'னு சொல்லிக்கறதுல பெருமைதான்.. ஆனா அதையே வாழ்க்கையா வாழறதுன்னா கொடுமைதானே ..என்ன பொறுத்த வரை, எனக்கு நம்ம ஊரு வேணும், நம்ம அரசியல் களம் வேணும், நம்ம சினிமா வேணும், மாமியார் மருமக சின்ன சின்ன சண்டை வேணும், சாமி ,பூஜை, வீட்டுக்கு அடிக்கடி friends, உரிமையா உள்ள வர பக்கத்து வீட்டம்மா.. பப்பு வோட குட்டி பசங்க...இப்படி எல்லாமே வேணும்.

புது வருஷ காலெண்டர் வந்தவுடனே நான் பாக்கறது ஜனவரில சமத்துவ பொங்கல், மார்ச்ல விஷுக்கனி, மே மாசம் சம்மர் வெக்கேஷன் ஊருக்கு போறது, அப்படியே ரெண்டு மாசம் கழிச்சு ஆகஸ்ட்ல க்ருஷ்ண ஜயந்த்தி, செப்டம்பர்ல விநாயகர் சதுர்த்தி, அக்டோபர்ல ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கார்த்திகை தீபம், டிசம்பர்ல மார்கழி உர்ச்சவம், மறுபடியும் குழந்தைக்கு வெக்கேஷன், ஊர்லருந்து எல்லாரும் வருவாங்க.. இதுக்கு நடுவே திருவாதரை, சதுர்த்தி, சஷ்டி, குலதெய்வம் கோவில், மந்த்ராலயம்னு அடிக்கிட்டே போலாமே...

என்னடா இது பெருசுக சுத்தற ஊரா இருக்கேன்னா.. மால், சினிமா, பீச்சு, வருஷம் ஒருமுறை லாங் ட்ரிப்.. ஷார்ட் ட்ரிப்புன்னு ஜனரஞ்சகமா இருக்கனும் வாழ்க்கை. எப்போ பாரு வீட பூட்டிக்கிட்டு, இல்லன்னா ஆபீசுல தனியா மொபைல்ல , முகநூல்ல லைக் வாங்கவும் மட்டும் வாழறதுக்கு NRIன்னு ஸ்டைல்லா பேரு வச்சுருக்காங்க. நிறைய பணம் இருக்கும் சரி.. அதையல்லாம் அனுபவிக்க முடியுமாநா தெரியல.. கேட்டா சோஷியல் லைஃபுன்னுவாங்க , ஸ்டேட்டஸ்னுவாங்க, என்னதான் நிழல் நிஜம் போலவே தெரிஞ்சாலும், நிஜம்மாகிடுமா என்ன!! சரி நிழலே அழகுன்னு சொன்னாலும் வேர் இல்லாத மரமா எவ்வளவு காலம் வாழ முடியும்?

கடைசி காலத்துல அம்மா அப்பாவ நல்லா வச்சு பாத்துக்க முடியாம கத்த கத்தயா பணம் மட்டும் அனுப்பிச்சா? Whatsapp லயே அன்பயும் அனுப்பிக்குவாங்க போல..."

- நானும் நிறைய கஷ்டப்பட்டுருக்கேனே.. நானே சமைச்சு நானே சாப்டு.. ச்ச.. போரிங்தான்.. ஆனா பணம் சேத்து எல்லா இடத்துக்கும் போயிட்டு வந்துடனும். FBல நாமளும் செக்கின் பண்ணோம்னு ஒரு இது இருக்கும்ல!!

சரி ஊருக்கு கால்போடு.பொங்கலுக்கு எல்லாரையும் சென்னைக்கு வர சொல்லுவோம். பாத்து ரொம்ப மாசம் ஆச்சு"!!

BORN (OR) MADE (OR) SELF-MADE?

  It is a pleasant day. I am strolling through the arid lands of Indiana in the United States.   Aah, here I see a majestic creature wal...