ஜல்லிகட்டுக்கு நிறைய ஆதரவும் பார்த்தாச்சு...எதிர்ப்பும் பார்த்தாச்சு...இப்போ சூடு ஆறும் முன் கொஞ்சம் உணர்வையும் தாண்டிய உண்மையையும் பேச வேண்டிய நேரம்.
நிறைய பேர் கோக் பெப்சிய தடை பண்ண சொல்லி குரல் கொடுக்கறாங்க, நல்ல விஷயம். ஆனா அதோட படம் முடியல; இது விழா முடிஞ்சு வீடு போய் சேரும் சேதி அல்ல. அதுக்கும் மேல நிறைய இருக்கு மக்கா...நம்ம செய்ய வேண்டியது நிறைய இருக்கு. போராட்டத்துக்கு அணி திரட்டிய நம்ம இப்போ வேலைக்கு அணி திரட்டணும்; விழிப்புணர்வு பகிர பலம் சேர்க்கணும். ஏன்னா இது அப்புடி சொன்ன உடனே வற்ர மாற்றம் கிடையாது. ஆழ்ந்து புரிதலுடன் வர வேண்டிய மாற்றம்.
அப்புடி என்னதான் சொல்ல வரேன்னு கேட்டீங்கனா விஷயம் ரொம்ப சிம்புள்..
1. மொதல்ல சாப்பாட்லேர்ந்து ஆரம்பிக்கறேனே..
ஒரே ஒரு கேள்வி தேன்... நம்ம சாப்பிடறத நம்ம தாத்தா பாட்டி பாட்டன் முப்பாட்டன் எல்லாம் சாப்பிட்டாங்களா? ஆம் என்றால் சாப்பிடவும், இல்லையென்றால் இன்றோடு விட்டு விடவும்...அய்யோ முடியாதுன்றவங்க, முயற்சி செய்து பாருங்க...இது என்னடா அட்வைஸ் மட்டும் பண்ணுது...இவங்க பண்ணுவாங்களானு யோசிக்கறவங்க கொஞ்சம் பொறுங்க, பதிவின் இறுதியில் பதில் வருது...
2. இரெண்டாவது யார் யாரெல்லாம் சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்க மாட்டீங்க கை தூக்குங்க? அட தெரிஞ்சது தானே நமக்கு அழுகின தக்காளினாலும் பல பளனு பாக் பண்ணி ஏசில ட்ராலில தள்ளி கார்டுல தேச்சாத்தான் "grocery purchase" ,பண்ண feel வரும்...இப்போ என்ன பண்றீங்கன்னா உங்க இயற்கை விவசாயிய நோக்கி ஓட்றீங்க...அட யாருப்பா இப்போ இயற்கை விவசாயமெல்லாம் பண்றதுன்னு உச்சு கொட்டாம கூகுள கேளுங்க நம்ம இயற்கை விவசாயத்தோட வெற்றியும் அத உயிர்ப்பிச்சு வெச்சிருக்கும் நம்ம நாட்டு மாடுகளோட இடமும் புரியும்...நம்ம சென்னை மற்றும் சுத்தி உள்ள கிராமங்கள்ளயே அவ்ளோ பண்றாங்க..."too costly"னு ஒத்த வரில கமண்ட் பண்ணிங்கனா நஷ்டம் உங்களுக்கு தான்.நம்ம சூப்பர் மார்க்கெட்ல,"Buy 1 Get 1 Free"ல ஏமாந்த கணக்கையெல்லாம் பாத்தா இது ஜுஜுபி கண்ணா...so if u spend wisely, organic food is never out of our reach...
3. மூணாவது கொஞ்சம் கஷ்டம்; ஆனா தேடினா நம்ம சிங்கார சென்னைலியே கெடைக்கும்...நீங்க தேட வேண்டியது நம்ம காணாம போன கோனார...அட தமிழ் உரை இல்லீங்கோ!! இவரு நம்ம ஊரு பால்கார்!! இப்போ ரொம்ப கொஞ்சம் பேரே இருக்காங்க பாஸ், கொஞ்சம் சீக்கிரம் போகணும்...இல்லனா இவங்களும் நம்மள மாதிரி ஐடி அடிமைகள் ஆகிடுவாங்க....அவர தேடி புடிச்சி ஒரு லிட்டர் பசும்பால்,என்ன பால்? ஆங் பசும்பால் அத வாங்கி கொஞ்சம் குடிச்சி பாருங்க...அட பச்சையாத்தேன். (உடனே சுத்தம்முனு கொடி தூக்காதீங்க நம்ம பாட்டன் முப்பாட்டன்னுக்கு தெறியாத சுத்தமொண்ணும் இல்லைங்கோ!!) ஒரு இருவது வருசம் பின்னாடி போன feel வரும்...அப்புறம் நீங்களே முடிவு பண்ணுங்கோ இன்னமும் இந்த ஷாம்பு பால், யுரியா பால், சுண்ணாம்பு பால்(சுண்ணாம்பு சத்து நமக்கு தேவையானதுனு நம்மளயே நம்ப வெச்சிருவானுக!be careful) இதெல்லாம் வேணுமா, இல்ல பசும்பால்,எருமை பால் வேணுமான்னு...
4. அடுத்து நம்ம போராட்டம் சீமை கருவேல மரங்களுக்கு எதிராத்தான் இருக்கோணும்...அட இதுவும் மரம் தானேன்னு நினைக்கறவங்களுக்கு ஒண்ணு சொல்றேன் கரு வேலு விவசாயின் நம் பூமியின் எமன்; அரசு நீர் உள்ள ஏரிகள், கண்மாயில் மண்ணைக்கொட்டி நீர் நிலைகளை மூடுவதற்கு முன்பே கண்மாய்களை அழிக்கும் வேலையை கச்சிதமாகச் செய்து வருவது கருவேல மரங்களே. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இந்த நஞ்சான மரத்த வேரோட எடுத்துட்டு நம்ம நாட்டு மரங்களான புங்கை, வேம்பு இதெல்லாம் நட்டு வளர்க்கணும்..
5. இதெல்லாம் பண்ணாலும் விவசாயம் செழிக்க நிறைய மழை வேண்டிருக்கு...பெய்யற மழைய சேமிக்க வேண்டிருக்கு...நம்ம சென்னைலியே ப்ளாட் போடாம மிச்சம் இருக்குற ஏரிகள், குளங்கள் எல்லாத்தையும் தூர் வாரணும், கரைய பலப்படுத்தணும் அடுத்த மழைக்குள்ள. சோ இந்த கோடை விடுமுறைய கொஞ்சம் விவசாயத்துலயும் செலவிடுங்க குட்டீஸ்...நாங்க எங்க் பொண்ண கூட்டீட்டு போக போறேன், நீங்களும் வாங்க ப்ளீஸ்...நம்ம பிள்ளைங்க சோறு "big bazaar"லேர்ந்து வருதுன்னு நெனச்சிட்டிருக்காங்க பாவம்! கொஞ்சம் மண் வாசனையையும் சொல்லி கொடுப்போமே!!
6. இன்னும் என்னம்மான்னு சலிச்சுக்கறவங்களுக்கு, பாயிண்ட் ஒன்றின் பதில் இதோ...
நாங்க குடும்பமா சூப்பர் மார்க்கெட்டை விட்டு நாலு வருஷம் ஆகுது...எங்கள் குழந்தைக்கு முப்பதாம் நாள் முதல் தாய் பாலுடன் சேர்த்தது கோனாரின் பசும்பால் தான் இன்று மாலை குடித்த பால் வரை..எங்கள் குழந்தைக்கு சர்க்கரை அறிமுகம் இல்லை...அதை ஒரு demon என்றே சொல்லி வளர்த்துள்ளோம்...
பனவெல்லம்,பனங்கல்கண்டு, வெல்லம்,நாட்டு சர்க்கரை எல்லாம் உண்டு. நான் சர்க்கரை என்பது "processed sugar". எங்களுக்கும் சர்க்கரை பயன்பாடு ரொம்பவும் குறைவு...இன்றும் வெளியே சென்றால் அவளுக்கு நான் பேக் செய்வது கடலை மிட்டாய், எள் மிட்டாய்,வாங்கித் தருவது இளநீர், கரும்பு சாறு; அதில் எங்களுக்கு பெருமையே...இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் நம் பாரம்பரியமான எண்ணெய் குளியல், இயற்கை முறை சாம்பிராணி, உரை மருந்து, வசம்பு, கசாயங்கள், குழந்தைகளுக்கான நலங்கு மாவு, நமக்கான சீயக்காய் (our family has good healthy hair), தாம்பூலம் போடுவது இதெல்லாம் நான் தமிழ் புத்தகத்துலேர்ந்து காபி பண்ணி இங்க போடலங்கோ!
சோ இறுதியா என்ன சொல்ல வரேன்னா "ஜல்லிகட்டு பனிப் பாறையின் முனை மட்டுமே! தோண்ட தோண்ட உங்களுக்கு புதையல் நிச்சயம்...
நம் பாரம்பரியம் எனும் கடல்ல முழுகி முத்தெடுத்தவங்க, நான் ஏதாவது விட்றுந்தேனா, உங்க கருத்த சொல்லுங்கப்பா!
உணவு அரசியலப்பத்தி பதிவு விரைவில் வருது! இந்திய FB வரலாற்றில் முதல் முறையாக!