!!ஹாய்!!
வாட்சப் ஃப்ளாஷ் ஆச்சு..
என்னாச்சு? இந்த நேரத்துல மெசேஜ் வந்துருக்குன்னு நானும் ரிப்ளை பண்ணேன்.
"சொல்லுப்பா"
- நம்மல்லாம் அவங்களமாதிரி இருக்க முடியாதோ!!
"எவங்கள மாதிரி??"
- FB பக்கமே போக க்கூடாதுன்னு நினைக்கறேன். ஆனாலும் முடியலையே.. பயபுள்ளைக விதவிதம்மா ஃபோட்டோ போட்டு அசத்தறானுவ.. பொறாமையா இருக்குப்பா.!!
"அட, அப்படி என்னப்பா ஆச்சு??"
- ஒருத்தன் என்னடான்னா நியூ யார்க் டைம் ஸ்கொயர்லருந்து போட்டோ போடறான்..இன்னொருத்தன் கலிஃபோர்னியா "பே" ஏரியாங்கறான், லண்டன்கறான்.. நாமல்லாம் என்னாத்த சாதிச்சோம் சொல்லு.. ஒரு வெளிநாட்டுக்காவது போயிருப்போமா?? வாழ்க்கைல தோத்துட்டோமா டீ??
"ஏன், நம்ம நல்லாதானே இருக்கோம்? சொந்த வீடு, ஹேட்ச் பேக் காரு, பப்பு, உங்கம்மா, எங்கம்மாப்பா, நமக்குன்னு ஊர்ல மனுஷங்க.. வேற என்ன வேணும் சொல்லு.. நல்லாதானே போயிட்டுருக்கு!! "
- இருந்தாலும் இந்த மாதிரி போஸ்டல்லாம் பாத்தாதான்..!!
"அட அவங்க போஸ்ட்டு மட்டும் பாத்து அவங்க லைஃப்ஸ்டைல கணக்குப் போடாத. அவங்க அதுக்கு கொடுக்கற விலயே தனி... ஏதோ ஒரு ஊர்ல போயி உழைச்சு பொழச்சு, எந்த சொந்தமும் சுத்தி இல்லாம புள்ள பெத்துக்கிட்டு, ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை ஊருக்கு வந்து, அய்யோ புழுதி!, அய்யோ பூச்சின்னு அலரி, நுனி நாக்கு ஆங்கில பெருமை பேசி, பிள்ளைங்களுக்கு தமிழ் பேச தெரியாதுனு ஊருக்கே poster அடிச்சி.......நம்மள எல்லாம் படிக்காத முட்டாள்கள் மாதிரி பாத்து..அப்பப்பா...அவங்க நிஜத்த திருப்பிப் பாத்தாதானே தெரியும், நாமல்லாம் எவ்வளோ நல்லா இருக்கோம்னு"
- ம்ம்.. என்னோட ஃப்ரெண்டுக்கு குழந்தை பிறந்துது போன மாசம். நாக்குக்கு கீழ ஏதோ பிரச்சனையாம். அந்த பிஞ்சுக்கு ஆப்பரேஷன் பண்ணாங்களாம், யார்டா உன் கூட இருந்தான்னா, நாந்தான் பாத்துக்கிட்டேன்னான். எனக்கு திக்குன்னு ஆகிடுச்சு!! என்னதான் காசு இருந்தாலும் மனுஷங்க வேண்டாமா??
"கரெக்டு 'நான் லண்டன்/ ஃப்ளோரிடா/ பெர்லின்/ அமெரிக்கா ல வேலை பாக்கறேன்'னு சொல்லிக்கறதுல பெருமைதான்.. ஆனா அதையே வாழ்க்கையா வாழறதுன்னா கொடுமைதானே ..என்ன பொறுத்த வரை, எனக்கு நம்ம ஊரு வேணும், நம்ம அரசியல் களம் வேணும், நம்ம சினிமா வேணும், மாமியார் மருமக சின்ன சின்ன சண்டை வேணும், சாமி ,பூஜை, வீட்டுக்கு அடிக்கடி friends, உரிமையா உள்ள வர பக்கத்து வீட்டம்மா.. பப்பு வோட குட்டி பசங்க...இப்படி எல்லாமே வேணும்.
புது வருஷ காலெண்டர் வந்தவுடனே நான் பாக்கறது ஜனவரில சமத்துவ பொங்கல், மார்ச்ல விஷுக்கனி, மே மாசம் சம்மர் வெக்கேஷன் ஊருக்கு போறது, அப்படியே ரெண்டு மாசம் கழிச்சு ஆகஸ்ட்ல க்ருஷ்ண ஜயந்த்தி, செப்டம்பர்ல விநாயகர் சதுர்த்தி, அக்டோபர்ல ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கார்த்திகை தீபம், டிசம்பர்ல மார்கழி உர்ச்சவம், மறுபடியும் குழந்தைக்கு வெக்கேஷன், ஊர்லருந்து எல்லாரும் வருவாங்க.. இதுக்கு நடுவே திருவாதரை, சதுர்த்தி, சஷ்டி, குலதெய்வம் கோவில், மந்த்ராலயம்னு அடிக்கிட்டே போலாமே...
என்னடா இது பெருசுக சுத்தற ஊரா இருக்கேன்னா.. மால், சினிமா, பீச்சு, வருஷம் ஒருமுறை லாங் ட்ரிப்.. ஷார்ட் ட்ரிப்புன்னு ஜனரஞ்சகமா இருக்கனும் வாழ்க்கை. எப்போ பாரு வீட பூட்டிக்கிட்டு, இல்லன்னா ஆபீசுல தனியா மொபைல்ல , முகநூல்ல லைக் வாங்கவும் மட்டும் வாழறதுக்கு NRIன்னு ஸ்டைல்லா பேரு வச்சுருக்காங்க. நிறைய பணம் இருக்கும் சரி.. அதையல்லாம் அனுபவிக்க முடியுமாநா தெரியல.. கேட்டா சோஷியல் லைஃபுன்னுவாங்க , ஸ்டேட்டஸ்னுவாங்க, என்னதான் நிழல் நிஜம் போலவே தெரிஞ்சாலும், நிஜம்மாகிடுமா என்ன!! சரி நிழலே அழகுன்னு சொன்னாலும் வேர் இல்லாத மரமா எவ்வளவு காலம் வாழ முடியும்?
கடைசி காலத்துல அம்மா அப்பாவ நல்லா வச்சு பாத்துக்க முடியாம கத்த கத்தயா பணம் மட்டும் அனுப்பிச்சா? Whatsapp லயே அன்பயும் அனுப்பிக்குவாங்க போல..."
- நானும் நிறைய கஷ்டப்பட்டுருக்கேனே.. நானே சமைச்சு நானே சாப்டு.. ச்ச.. போரிங்தான்.. ஆனா பணம் சேத்து எல்லா இடத்துக்கும் போயிட்டு வந்துடனும். FBல நாமளும் செக்கின் பண்ணோம்னு ஒரு இது இருக்கும்ல!!
சரி ஊருக்கு கால்போடு.பொங்கலுக்கு எல்லாரையும் சென்னைக்கு வர சொல்லுவோம். பாத்து ரொம்ப மாசம் ஆச்சு"!!
No comments:
Post a Comment