தீம் தன நா..தீம் தன நா..
ஜோவென
பெய்யும் மழையே
ஜில்லென
ஆர்ப்பரிக்கும் வெள்ளி கம்பியே
மழை
என்றதும் சட்டென நினைப்பது
அம்மா
சுடும் பஜ்ஜி;மணக்கும் ஏலக்காய்
தேனீர்
ஏனோ இன்று மட்டும்
நினைவில் ஓடுவது
வீதியில் கண்ட
தெருநாயின் சடலம் (அதை யார்
எடுத்தாரோ?)
கூவம் கரையோரத்து ஓலை
தீப்பெட்டிகள்
தொப்பலாகச் செல்லும் அந்த தாத்தா
வழியில்
பூ கட்டி விற்கும் வயதான
அம்மா
கொட்டும் மழையில் தன் பிழைப்புக்காக
"பொரி பொரி கடலை"யென
கூவும் ஏழு வயது சிறுவன்
கால் வயிறுக்கு போராடும் இவர்களுக்கு வெள்ளியாவது கம்பியாவது?
உன்னைச்
சொல்லி குற்றமில்லை...
என்றும்
உனக்கில்லை பாகுபாடு
ஏனோ
இங்கு இத்துணை வேறுபாடு
என்று
மாறுமோ பூமி சமவெளியாய்
அன்றே
நீ அனைவருக்கும் தெரிவாய் வெள்ளி கம்பியாய்
அது
வரை மழையே யாரோ சொல்வது
ஒலிக்கும்....
நாசமா
போன மழை வந்து ஒரு
நாள் பொழப்பு போச்சு......
No comments:
Post a Comment