பாலைவனத்தில் இருந்து ஓர் மடல்
பாலைவனத்தில் இருந்து உனக்கோர் மடல் வரைந்தேன்
அதை காற்றிடம் தூது அனுபின்னேன்....பாவம் இங்கு காற்றுக்கு தமிழ் தெரியவில்லை..
திருப்பி அனுப்பியது........
ஆதலால் இணைய தளத்திடம் சரண் புகுந்தேன்
இதோ என் மடல்...
கர்பமின்றி தாயாவது சாத்தியமா?
கர்பமின்றி தாயாவது சாத்தியமா? என்றேன் நான்
ஆம் என்றாய் நீ..........
உன்னை என் இதயத்தில் சுமப்பதாலோ...
உன்னை என் இதயத்தில் சுமப்பதால்...
என் இதயமும் கருவறையானது ....
உன்னை என் கண்களுக்குள் சிறை பிடிப்பேன் ! ! !
உன்னை படைத்தவன் கேட்பினும் தர மறுப்பேன் ! ! !
சோலையும் பாலைவனமாகும் காதலர் பிரிந்தால்....
இந்த பாலைவனத்தையும் சோலையாக்கினாய் உன் நினைவுகளால்
ஆனால் அன்பே....இப்பொழுதோ....
இப்பாலைவனத்தில் நீரில்லா தளிராய் நான் வாடுகிறேன் உனதிந்த
அறிவிப்பில்லா மௌனத்தால்.......
உனது சிறுபிள்ளை ஏதேனும் தவறு செய்திருந்தால்
என் அன்னையாய் என்னை மன்னித்து விடு
என்று கலையும் உன் மௌனம்?
என்று விடியும் என் வானம்?
விடியலுக்காக காத்திருக்கிறேன் காதலா.......
ada da archu kalakre...
ReplyDelete